Saturday, September 27, 2014

மதமாற்று தடைச் சட்டம்

தீண்டாமையை ஒழிக்க முடியாதவர்கள். விதவைக்கு மறுவாழ்வு அளிக்க முடியாதவர்கள், வாழ்வுரிமை அளிக்க முடியாதவர்கள், சிறுபான்மையினர், பெரும்பான்மையினராக மாறிவிடுவார்கள் என்று அச்சநிலையின் காரணமாக கொண்டு வரப்பட்டசட்டம்தான்
கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் 2002 (செப்டம்பர்).

இந்த மதமாற்ற தடைச் சட்டத்தைப் பற்றிதெரிந்துகொள்ள வேண்டும் என்றால் நாம் சில
விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.இந்த சட்டம் இந்தியாவில் 9, 2002ல்பிரகடனப்படுத்தப்பட்டது இல்லை. ஒரிசாமாநிலத்தில் ஒரிசா மத சுதந்திரம் சட்டம் 1967
இதனைத் தொடர்ந்து 1968 மத்திய பிரதேசத்தில் மத்திய பிரதேச சுகாதாத்திர ஆதினியம்
27இல் 1968 கொண்டு வரப்பட்டது.இந்த சட்டம் கொண்டு வர மிக முக்கிய
காரணம் என்று சொல்லப்படுவது.2002 ஜெயலலிதா ஆட்சி காலத்தில் புகார்
அதிகம்.
(1) சட்டமன்றத்தில் விவாதித்தபோது ஓர்
புகார் கூட ஆதாரமாக எடுத்து வைக்க
முடியவில்லை.

(2) அவர் சொன்னது, மதுரையில்
மதமாற்றுவதற்காக ரூ. 2000 கொடுத்து
தாழ்த்தப்பட்டவர்கள், கிறிஸ்தவ மதத்திற்கு
மாற்றினார்கள் என்று குற்றம் சாட்டினார்கள்.

(3) ஆனால் ஆதாரபூர்வமாக எதையும் தர
முடியவில்லை. ஆனால் எதற்கு மாறினார்கள்
என்பது பிறகு பார்ப்போம். அதற்கு முன்பாக
இந்தச் சட்டம் எதை குறை கூறுகிறது என்று
பார்ப்போம்.

(4) மூன்று விஷயங்களை செய்யவில்லை
என்றால் மூன்று ஆண்டு காவல் ரூபாய் 50,000
முதல் 1 லட்சம் அபராதம்.
- ஆசை காட்டுதல்
- மதமாற்ற முயற்சி செய்தால் தகவல் கொடுக்க வேண்டும்
- ஆசை காட்டுதல்

உனக்கு சம உரிமை கொடுக்கப்படும்.இறைவனை வணங்கும் பள்ளிவாசல்களிலும்,
திருமணத்திலும், எல்லாச் சுயதுக்க காரியத்திலும் உனக்கு சம உரிமை அளிக்கப்படும்
என்று கூறுவதும் ஆசை காட்டுதலில்அடங்கும்.

உனக்கு சொர்க்கம் உண்டு என்றுகூறினாலும், ஆசை காட்டுதலில் அடங்கும்.மதமாற்ற முயற்சி செய்தல்உண்மையான மார்க்கத்தை எடுத்துச்சொல்வதற்காக தாவா  செய்தாலும்
மதமாற்ற முயற்சி செய்தல்’ என்று கூறிபிரச்சனை செய்ய இயலும்.
தனி ஒரு மனிதரிடம் தாவா செய்தாலோ,அல்லது அவர் இஸ்லாத்தை பற்றி தெரிந்து
கொள்வதற்கு கேட்டாலோ மதமாற்ற முயற்சி செய்தல் என பிரச்சனை செய்யலாம்.

தகவல் தர வேண்டும் (தாசில்தார் அல்லது
நீதிபதிக்கு)

1. தகவல் கொடுத்தாலும் சரியான
முறையில் தகவல் வரவில்லை என்று கூறி
மதம் மாறியவர்களை பிரச்சனைக்கு
உருவாக்கலாம்.

2. எத்தனை பேர் எந்தெந்த ஊர், யார் யார்
தாவா செய்கிறார்கள் என்று இதன்மூலம்
அறிந்து, இதைப்போல் பல சட்டங்களைக்
கொண்டு வந்தும் அவர்களை பிரச்சனைக்கு
உள்ளாக்கியும் தாவாக்களை நடக்க
முடியாமல் செய்யலாம்.

இதுபோன்ற பிரச்சனைகள் முஸ்லிம்களுக்குபெரிது இல்லை
இந்தியாவை இந்து ராஷ்டிராவாக மாற்றுவதற்காக இதுபோன்ற பல சட்டங்களை
இயற்றியும் அகற்றியும் (தடா போல)இருக்கிறார்கள்.
முஸ்லிம்களுக்கு அல்லாஹ் கொடுத்த குர்ஆனிய சட்டத்தை(ஷரியத் சட்டம்) பின்தொடர்ந்து செல்லும்வரைக்கும் இதுபோன்ற எத்தனை வந்தாலும் பிரச்சனை இல்லை.
இன்ஷா அல்லாஹ் இதற்குதான் தாருல்இஸ்லாம் பவுண்டேஷன் டிரஸ்ட் அப்போது
திருவி நடத்திவந்த விடியல் வெள்ளிபத்திரிகையில் இதைப்போன்ற பிரச்சனைகள்
வரும்போது எங்களை தொடர்பு கொள்ளுங்கள். மனித நீதி பாசறையில் சட்ட
உதவிக்குழு தயாராக இருக்கிறது என்றுகூறியிருந்தோம். மேலும் விவரங்களுக்கு
விடியல் வெள்ளி (நவம்பர் 2002).

ஏன் மதம் மாறுகிறார்கள்?

தீண்டாமையின் கொடுமை காரணங்களினாலும், தீண்டாமை, பார்க்காமை, பலகாமை
போன்ற கொடுமைகளின் காரணமாகவேதவிர பணத்திற்காகவோ கட்டாயப்படுத்தி
யோ ஆசைக் காட்டுதலின் காரணமாகமாறுதல் இல்லை.உதாரணத்திற்கு காஞ்சிபுரம் அருகில்
உள்ள கூத்தரம்பாக்கம் கிராமத்தில் 50 தலித்குடும்பத்தினர்கள் இஸ்லாத்திற்கு மாறி
னார்கள். தங்கள் ஊரில் இருக்கும் மாரியம்மன் தேர் தங்களின் தெருவிற்கு
வருவதற்காக 1979 முதல் பல வருடங்கள்போராடி வந்தும் தேர் தெருவுக்குள் வர
வில்லை. இந்த பிரச்சினையை சமாளிப்பதற்காக அப்போது அமைச்சராக
எஸ்.டி.சோமசுந்தரம் உங்கள் தெருவிற்கு ஒருகோவில் கட்டித் தருவதாக கூறினார். அந்த
கிராமத்தின் மக்கள் எங்களிடம் காசுஇல்லாமல் இல்லை. கோவில் தேவை
என்றால் நாங்களே கட்டிக்கொள்வோம் என்றுகூறினார்கள். அவர்கள் எதிர்பார்த்தது சம
உரிமையே.(ஆதாரம்: மதமாற்றம் தடைச் சட்டம்
தமிழ்நாட்டை பார்ப்பன நாடாக்கும் சதியே.
வெளியிடுவோர் மக்கள் கலை இலக்கியக்
கழகம்)

திருவிதாங்கூர் அதாவது இன்றையகன்னியாகுமரி மாவட்டம் 1800களில் நாடார்
சமூகத்தில் சேர்ந்தவர்களை சாணார்கள் எனஅழைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு சமூக
கட்டுப்பாடுகள் இருந்தன. ஆண்கள் மீசைவளர்க்கக் கூடாது, தலப்பா கட்டக் கூடாது,
பெண்கள் இடுப்புக்கு மேல் ஆடை அணியக்கூடாது, பெண்களுக்கு மார்பகங்களுக்கு கூட
வரி கட்டாவிட்டால் பெண்களுடையமார்பகங்கள் அறுக்கப்பட்டன. பெண்கள்
இடுப்பில் தண்ணீர் எடுக்கக் கூடாது.தலையில் தான் எடுக்கவேண்டும். பசு வளர்க்கக்கூடாது, ஓடு வேளிணிந்த வீடுகள் கட்டக்கூடாது,தொழிற்சாலைகள், பாலங்கள், கிணறுகளை
உபயோகிக்கக்கூடாது. உயர் சாதிகள்இருக்கும் சாலை வழிகளில் போகக் கூடாது.
இதுபோன்ற தீண்டாமையின் காரணமாகத்தான் மதம் மாறினார்கள். பொருளாதாரத்
திற்காக மாறவில்லை. சமூக ரீதியில்தாழ்த்தப்பட்ட காரணத்திற்காக மாறினார்கள்.ஏனென்றால், அன்றைய சூழலில் அங்குபொருளாதாரத்தில் மேம்பட்டு இருந்த
தாங்கள் மற்றும் நாஞ்சி நாட்டு வெள்ளாளர்போன்ற உயர்சாதி இந்துக்களைப் போன்ற
நாடார்களும் பொருளாதார ரீதியாக
மேட்பட்டு இருந்தனர்.மதமாற்றம் என்பது பொருளாதாரத்தின்
அடிப்படையாக நடைபெறுவது என்பது இதன்மூலம் அடிபட்டு போகிறது.

திப்பு சுல்தான் நடவடிக்கை எடுத்தார்

* திப்பு சுல்தான் திருவிதாங்கூர் அரசருக்கு ஒரு
கடிதம் எழுதுகிறார். நான் ஊர் வழியாகச்
சென்றபோது அங்குள்ள பெண்கள்
இடுப்புக்கு மேல் ஆடை அணியாமல்
இருந்ததைப் பார்த்தேன். அவர்கள் என்ன
காரணத்தால் ஆடை அணியவில்லை?

* ஒருவேளை வறுமை காரணமாக ஆடை
அணியவில்லை என்றால் அவர்களுடைய
வருமானத்தை மேம்படுத்த வழி செய்யுங்கள்.

* அல்லது சமூகக் கட்டுப்பாடுகள்
காரணமாக அணியவில்லையா?
இத்தனை நாட்களுக்குள் ஒரு தேதியைக்
குறிப்பிட்டு அதைச் சரிசெய்து ஆடை
அணியச் செய்ய வேண்டும். இல்லையென்
றால் நான் உங்கள் மீது போர் தொடுத்து அந்த
மக்களை மாற்றுவதைத் தவிர எனக்கு வேறு
வழியில்லை.

* 1899 சிவகாசியில் நாடார்கள்
கோவிலுக்குள் நுழைய முயன்றபோது
உயர்சாதி இந்துக்களால் அடித்து கடுமையாக
தாக்கப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இது சம்பந்தமாக இங்கிலாந்தில் உள்ள
பிரைவி கவுன்சில் என்ற மன்னர் மாமன்றத்தில்
வழக்கு நடந்தது. இவர்கள் கோவிலுக்குள்
நுழையக் கூடாது என்றே அதிலும் தீர்ப்பு
வந்தது. இதன் பாதிப்பால் திருநெல்வேலியில்
3000 நாடார்கள் இஸ்லாத்தை தழுவினர்.

* திண்டுக்கலில் சிறுநீர் குடிக்க வைத்தது,
மலம் திண்ண வைத்தது போன்ற கொடுமை
யாலும் உண்மையான இறைவனை
தேடியும்தான் மதம் மாறுகிறார்கள்.
* பொருளாதாரத்திற்காகவோ,
பணத்திற்காகவோ, ஆசை காட்டியோ,
அச்சுறுத்தியோ மதம் மாறவில்லை.

முஸ்லிம்களாகிய நாம் என்ன செய்ய
வேண்டும்?

* எல்லாவிதமான பிரச்சனைக்கும்
குர்ஆனிலும், ஹதீஸ்லும் தீர்வுகள் இருக்கிறது.

* இப்போதுதான் இதுபோன்ற பிரச்சனை
களுக்கு சட்டத்தின் பெயரில் (மதமாற்ற
தடைச் சட்டம் வந்திருக்கிறது. இதற்கு முன்பு
பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்த அரசாங்கத்
தாலும் அதிகார வர்க்கத்தினாலும் பல
பிரச்சனைகளை எதிர்கொண்டு இருக்கின்றது இஸ்லாம்.
(உதாரணம்)
*சூரத்துல் புருஜ் (நெருப்பு குண்டவாசிகள்)
*சூரத்துல் காஹப் (குகைவாசிகள்)
*மூஸா (அலை) காலத்தில்
ஃபிர்அவ்னுடைய தொந்தரவு
*இப்றாஹிம் (அலை) காலத்தில்
நம்ருத்துடைய தொந்தரவும் இதற்கும்
மேலாக இருந்தாலும் தாவா பணியை செய்து
கொண்டிருந்தார்கள்.

ஆனால், இப்படியெல்லாம் கஷ்டப்படவேண்டியதில்லை. நாம் வாழும் இந்த
நாட்டில் தாவா செய்வது மிகவும் எளிது.ஆன்மிகத் தேடல் அதிகம் உள்ள நாடு இந்தியா.
தோண்டத் தோண்ட தங்கம் கிடைக்குதோஇல்லையோ சிலைகள் கிடைக்கும். பல
பாலியல் பிரச்சனைகள், பல கொலைகள்,கொள்ளைகள் சம்பந்தப்பட்ட நடவடிக்கை
கள் எடுத்த சாமியார்கள் இருந்தாலும்சாமியார்களின் எண்ணிக்கை குறையவில்லை.
சாதாரணமாக நம் நாட்டில் சில பொருட்களை வாங்கிச் சென்றாலும் தக்காளியாக
இருந்தாலும், கொத்தமல்லியாகஇருந்தாலும் பார்த்து பார்த்து வாங்கும் இந்த
நாட்டில் தன்னுடைய, தன்மானத்தையும்,தலையையும் சமர்ப்பிப்பது. ஓர் சிலையிடத்
திலா, ஓர் மிருகமிடத்திலா. இல்லை தன்னைபடைத்து, வளர்க்கின்ற இறைவனிடத்திலா
என்று புரிய வைத்தால் போதும். இதுபோன்றபிரச்சனைகள் வரும்போது இறைவனுடையதிருவசனம் ஞாபகத்திற்கு வரவேண்டும்.

" அல்லாஹூடைய மார்க்கத்தை வாயால் ஊதி
அணைத்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்.
அல்லாஹ் அவனுடைய ஜோதியை பரிபூரணம்
ஆக்கிவிடுவான். "
(அல்குர்ஆன்)


No comments:

Post a Comment